வித்தியாலயத்திற்கு கணனிகள் (Computers)
அன்பளிப்பு-10.06.2019
----------------------------------------------------------------
புங்குடுதீவு கமலாம்பிகை கனிஷ்ட மகா வித்தியாலயத்திற்கு 10.06.2019 ந்திகதி 06 கணனிகள் (Hp Desktop PC: Intel core i5, 500GB Ram, 500GB Hard Drive, Windows 10) பாடசாலை அதிபர் திருமதி.சி.இராசரெத்தினம் அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
மேற்படி கணனிகளை எமது பாடசாலை பழைய மாணவரும், கனடா முன்னணி தொழிலதிபருமான திரு.மார்க்கண்டு மோகனபாலன் (உரிமையாளர்: TechSource Computer Liquidators) அவர்கள் அன்பளிப்பு செய்துள்ளார். அவருக்கு பாடசாலை சமூகத்தின் சார்பில் நன்றிகளை தெரிவிப்பதோடு, அன்னாரின் சமூகபற்றினையும், மண் சார்ந்த செயற்பாட்டினையும் பாராட்டுகின்றோம்.
இக்கணனிகளை கனடாவில் Aero Courier எனும் பொதிகள் அனுப்பும் நிறுவனத்தை நடாத்தி வருபவரும், எமது பாடசாலை பழைய மாணவருமான திரு.இராசமாணிக்கம் சத்தியகுமார் அவர்கள் இலவசமாக அனுப்பி உதவியுள்ளார். அன்னாருக்கும் பாடசாலை சமூகத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
----------------------------------------------------------------
வித்தியாலய திறன் வகுப்பறை (Smart Class Room)
திறப்பு விழா-22.05.2019
பாடசாலை பைகள் வழங்கல்
திறப்பு விழா-22.05.2019
புங்குடுதீவு கமலாம்பிகை கனிஷ்ட மகா வித்தியாலயத்தில் திறன் வகுப்பறை (Smart Class Room) தீவக வலயக் கல்விப்பணிப்பாளர் திரு.ஆ.இளங்கோ அவர்களால் 22.05.2019 ந்திகதி மு.ப.10.00 மணிக்கு திறந்து வைக்கப்பட்டது. பாடசாலை அதிபர் திருமதி.சி.இராசரெத்தினம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் தீவக வலயக் கல்விப்பணிப்பாளர் திரு.ஆ.இளங்கோ, திரு.ந.தர்மபாலன் (முன்னாள் அதிபர், புங்குடுதீவு மகா வித்தியாலயம்), திருமதி.சா.கிருஸ்ணதாஸ் (கோட்டக் கல்விப்பணிப்பாளர்-வேலணை), ஆகியோருடன் புங்குடுதீவு பாடசாலைகளின் அதிபர்களும் கலந்து சிறப்பித்தனர்.
திறன் வகுப்பறைக்கான அனுசரணை:
மேற்படி திறன் வகுப்பறையை (Smart Class Room) அமைப்பதற்கு அனுசரணை வழங்கிய எமது பாடசாலை பழைய மாணவர்களும், கனடா முன்னணி தொழிலதிபர்களுமான திரு.அம்பலவாணர் திருவருட்செல்வன் (SR reliance auto collision inc.), திரு.திருநாவுக்கரசு கருணாகரன் (Pizza Nova) ஆகியோருக்கும், வகுப்பறையின் பாதுகாப்பு கருதி கிறில் அடிப்பதற்கு ஒரு பகுதி நிதியை வழங்கிய திரு.சுப்பிரமணியம் பத்மநாதன் (கனடா) அவர்களுக்கும் பாடசாலை சமூகத்தின் சார்பில் நன்றிகளை கூறுவதோடு, அவர்களின் சமூகபற்றினையும், மண் சார்ந்த செயற்பாட்டினையும் பாராட்டுகின்றோம்.
.........................-------------------------
வித்தியாலய மாணவர்களிற்கான பாடசாலை பைகள் வழங்கல்
மடத்துவெளியைச் சேர்ந்த அமரர் பரராசசிங்கம் கனகலிங்கம் அவா்களின் ஞாபகார்த்தமாக 09.01.2018 ந்திகதி புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலய மாணவர்களிற்கு அன்னாரின் குடும்பத்தாரால் பாடசாலை பைகள் (100 Back Bags) வழங்கப்பட்டபோதான பதிவுகள். அன்னாரின் குடும்பத்தாருக்கு பாடசாலை சமூகத்தின் சார்பில் நன்றி கூறுகின்றோம்.
வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல்
உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு
வித்தியாலய பழைய மாணவர் சங்க பிரான்ஸ் கிளையின் நிதி பங்களினால் 05.01.2018 ந்திகதி வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில... பிரான்ஸ் பழைய மாணவர் சங்க கிளை நிர்வாக சபை உறுப்பினர்களுக்கு பாடசாலை சமூத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகள்!
ETC கனடா தன்னார்வ தொண்டு நிறுவனத்தினால் தீவக கல்வி வலயத்தினுாடாக புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலயத்திற்கு 10 கணனிகள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. ETC கனடா தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு பாடசாலைச் சமூகத்தின் சார்பில் நன்றிகளை கூறுவதோடு, அதன் கல்விச் சேவையையும் பாராட்டுகின்றோம்.
இந்நிலையில் கணனி வகுப்பறையை ஒழுங்கமைப்பதற்கான தளபாடங்களான இருபது இருக்கைகளைக் கொண்ட 10 கணனி மேசைகளும், அதற்கான இருபது கதிரைகளும் புங்குடுதீவு 8ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த அமரர் திருமதி வை.தெய்வானைப்பிள்ளை ஞாபகார்த்தமாக அன்னாரின் பேரப்பிள்ளைகள் அன்பளிப்பு செய்துள்ளனர். அவர்களுக்கும் பாடசாலைச் சமூகத்தின் சார்பில் நன்றிகளும், பாராட்டுக்களும் உரித்தாகுக. இதன் உருவாக்கத்தில் முன்னின்று உழைத்த பாடசாலை ஆசிரியர் திரு.கிருபா, திரு.சு.சண்முகநாதன் (சுவிஸ்) ஆகியோருக்கும் நன்றிகள்.
ஆரம்ப வகுப்புக்களுக்கு தொண்டர் ஆசிரியர்கள் நியமனம்
புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலயத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த ஆரம்ப வகுப்பு ஆசிரியர்களுக்கான பற்றாக்குறைக்கு பாடசாலை பழைய மாணவர் சங்கம் மேற்கொண்ட தீவிரமுயற்சியினால் தீர்வு காணப்பட்டுள்ளது. தரம் 1, தரம் 2, தரம் 3, தரம் 4 ஆகிய ஆரம்ப வகுப்புகளுக்கு கல்வி அலுவலகத்தினால் நீண்ட காலமாக ஆசிரியர்கள் நியமிக்கப்படாத நிலையிலும், நியமனம் பெற்ற ஒரு ஆசிரியரும் பதிலாசிரியரின்றி இடமாற்றம் பெற்றுச் சென்ற நிலையிலும் மாணவர்களின் அடிப்படைக்கல்வி வெகுவாகப் பாதிக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் பாடசாலை பழைய மாணவர் சங்கம் பாடசாலை அதிபர், உதவி அதிபர் ஆகியோரினுாடாக எமது பாடசாலை சூழலில் உயர்கல்வி கற்று வேலைவாய்ப்பின்றி இருந்த மாணவர்களிடம் விண்ணப்பம் கோரப்பட்டு நேர்முகப்பரீட்சை மூலம் நான்கு ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டு தற்போது இவ்வகுப்புக்களுக்கான கற்பித்தல் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
இப்பிரச்சினைக்கு பாடசாலை அதிபர், உதவி அதிபர் ஆகியோருடன் தொடர்புகளை ஏற்படுத்தி உரிய தீர்வினைக் கண்டதோடு ஆசிரியர்களுக்கான வேதனத்தை வழங்குவதற்கு உரிய ஏற்பாடுகளையும் மேற்கொண்ட சுவிற்சர்லாந்து பழைய மாணவர் சங்க உறுப்பினர் திரு.சுப்பிரமணியம் சண்முகநாதன் அவர்களுக்கும், பாடசாலை பழைய மாணவர் சங்கத்தினருக்கும் பாடசாலை சமூகத்தின் சார்பில் நன்றிகளும், பாராட்டக்களும் உரித்தாகுக.மேலும் இவ்வாசிரியர்களுக்கான வேதனத்தை வழங்க முன்வந்த சுவிற்சர்லாந்தை சேர்ந்த திரு.சுப்பிரமணியம் சண்முகநாதன், திரு.அருணாசலம் கைலாயநாதன், திரு.செல்லத்துரை ரூபகாந்தன், திரு.தம்பியையா ஜெயக்குமார் ஆகியோருக்கும் பாடசாலை சமூகத்தின் சார்பில் நன்றிகளும், பாராட்டுக்களும்.
பாடசாலை விளையாட்டு மைதான சுற்றுமதில் அமைத்தல்
பாடசாலை பாதுகாப்பு கருதி விளையாட்டு மைதானத்தைச் சுற்றி மதில் அமைத்தல் தொடர்பாக முன்னாள் அதிபர் திரு.சொ.பகீரதன் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க புங்குடுதீவு-கனடா பழைய மாணவர் சங்கமும், புங்குடுதீவு-சுவிஸ் பழைய மாணவர் சங்கமும் இணைந்து பாடசாலையின் பாதுகாப்பு கருதி இவ்வேலைத் திட்டத்தை உடனடியாக செய்து முடிப்பதற்காக தங்களுக்கிடையில் கலந்துரையாடியபோது சுவிஸ் பழைய மாணவர் சங்கத்தினர் பெருமனதுடன் தாங்கள் தனித்து செய்து முடிப்பதென்ற முடிவினை நிர்வாக சபையில் ஏகமனதாக நிறைவேற்றி வேலைத்திட்டத்தை உடனடியாக ஆரம்பித்தனர். இக்கட்டுமானத்திற்காக 20.04.2015 இல் முதற்கட்ட நிதியாக 4000 சுவிஸ் பிராங் (5,50,000 ரூபா) அனுப்பி வைக்கப்பட்டு திரு.அருணாசலம் சண்முகநாதனின் மேற்பார்வையில் மதில் கட்டுமான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து இதற்கான இரண்டாம் கட்ட நிதியாக 03.09.2015 இல் 4000 சுவிஸ் பிராங்கும் (5,50,000 ரூபா), மூன்றாம் கட்ட நிதியாக 05.06.2016 இல் 4000 சுவிஸ் பிராங்கும் (5,75,000 ரூபா) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அதிபர் திரு.சொ.பகீரதன் அவர்களால் 10.06.2014 இல் ஒப்பந்தக்காரரிடமிருந்து பெறப்பட்ட கூறுவிலை விபரம்
1200 அடி நீளமான சுற்று மதிலைக் கட்டுவதற்கு கூறுவிலையை ஏற்றுக்கொண்ட ஒப்பந்தக்காரர் இணங்கிக் கொண்ட நிபந்தனைகள்
1.கட்டிட பொருட்கள் அனைத்தும் கூறுவிலைப்படி ஒப்பந்தக்காரர் கொண்டு வருதல் வேண்டும்.
2.கட்டிடம் முழுவதும் சாட்டித்தண்ணீர் கொண்டு கட்டப்படுதல் வேண்டும்.
3.அத்திவாரம் 21/2 அடி ஆழமும், 2 அடி அகலமுமாக இருக்க வேண்டும். அத்திவாரம் அத்திவாரக்கல்லுப் போட்டு சீமேந்துக் கலவையினால் கட்டப்படல் வேண்டும்.
4.அத்திவாரத்தின் மேற்பத்திரிப்புப் பகுதி 11/2 அடி உயரமும், 1 அடி அகலமும் கொண்டதாக அத்திவாரக் கல்லினால் கட்டப்பட வேண்டும்.
5.மதிலின் உயரம் 9 கல்லு உயரத்திற்கு அமைதல் வேண்டும்.
6.மதில் கட்டிய பின்பு 1 அங்குல தடிப்புக்கு பூசுதல் வேண்டும்.அத்துடன் துாண் கட்டி மட்டம் கட்டுதல் வேண்டும்.
மேற்படி வேலைகள் யாவும் செய்து முடிக்க 1 அடி மதிலுக்கு 1900 ரூபா வீதம் மொத்தம் 1200அடி மதிலுக்கும் மொத்தமாக 22,80,000 ரூபா செலவாகும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
சுற்றுமதிலுக்கான கூறுவிலை விபரம்
நடைபெற்றுவரும் பாடசாலை சுற்று மதில் வேலைகள்

மாணவர்களுக்கு புத்தகப்பைகள் வழங்கல்
பிரான்ஸ் கமலாம்பிகை கனிஷ்ட மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க கிளையினால் அனுப்பி வைக்கப்பட்ட புத்தகப்பைகள் 26.01.2015 இல் கமலாம்பிகை வித்தியாலய மாணவர்களுக்கு வழங்கப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில….. பிரான்ஸ் பழைய மாணவர் சங்க கிளை உறுப்பினர்களுக்கு பாடசாலை சமூத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகள்!
கணனி ஆசிரியருக்கான வேதனம் வழங்கல்
கமலாம்பிகை வித்தியாலய பழைய மாணவர் சங்க சுவிற்சர்லாந்துக் கிளைக்கு பாடசாலை அதிபரினால் அனுப்பி வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக பாடசாலையில் கணனி ஆசிரியராக கடமையாற்றும் செல்வி கு.கிருஷ்ணவதனி அவர்களுக்கான வேதனத்தை வழங்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டசுவிஸ் கிளையினால் உடனடியாக சம்பளப்பணம் அனுப்பி வைக்கப்பட்டு கணனி ஆசிரியருக்கான வேதனம் (மாதாந்தம் இலங்கை ரூபா 15,0000 வீதம் ) பழைய மாணவர் சங்க இணைப்பாளர் திரு.அ.சண்முகநாதன் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.
நுாலக உதவியாளருக்கான வேதனம் வழங்கல்
கமலாம்பிகை வித்தியாலய பழைய மாணவர் சங்க கனடா கிளைக்கு பாடசாலை அதிபரினால் அனுப்பி வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக பாடசாலை நுாலகத்தில் நுாலக உதவியாளராக கடமையாற்றும் செல்வி சி.சரண்ஜா அவர்களுக்கான வேதனத்தை வழங்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட கனடா கிளையினால் உடனடியாக சம்பளப்பணம் அனுப்பி வைக்கப்பட்டு நுாலக உதவியாளருக்கான வேதனம் (மாதாந்தம் இலங்கை ரூபா 15,0000 வீதம் ) பழைய மாணவர் சங்க இணைப்பாளர் திரு.அ.சண்முகநாதன் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.
வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் கையளிப்பு..!
புங்குடுதீவு கமலாம்பிகை மகாவித்தியாலய பழைய மாணவர்கள் சங்க பிரித்தானியா கிளையின் அனுசரணையில், லண்டன் வோல்த்தம்ஸ்ரோவ் கற்பக விநாயகர் ஆலயத்தால் புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலய மாணவர்களுக்கு, எதிர்வரும் புதிய ஆண்டுக்காக கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப் பட்டுள்ளன. புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலய பழைய மாணவர் சங்க பிரித்தானிய கிளையினர், லண்டன் வோல்த்தம்ஸ்ரோவ் கற்பக விநாயகர் ஆலயத்திடம் முன்வைத்த வேண்டுகோளை ஏற்று, மேற்படி எழுது கருவிகள் வழங்கும் நிகழ்வு புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலயத்தில் தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் தலைமையில் சிறப்புற இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வட மாகாண கல்விப்பண்பாட்டலுவல்கள் அமைச்சர் த.குருகுலராசா வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தீவக வலய உதவிக்கல்விப்பணிப்பாளர் திரு.குணநாதன், புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலய முதல்வர் செ.பகிர்தரன், மடத்துவெளி முருகன் ஆலய தலைவர் சண்முகநாதன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
பழைய மாணவர் சங்க பிரித்தானியாக்கிளை
புங்குடுதீவு கமலாம்பிகை மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க பிரித்தானியாக்கிளை 31. 08.2014 பிற்பகல் 5.00 மணிக்கு லண்டனில் நடைபெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. பின்வருவோர் நிர்வாக சபை உறுப்பினர்களாக சபையினரால் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்.
நிர்வாகசபை உறுப்பினர்கள்-:
திரு அ.கஜேந்திரன் ( சுமன்) ( தலைவர்)
திரு.ச.சதீஸ்குமார் (சதீஸ்) ( செயலாளர்)
திருமதி.ஜீ.விஜியமாலா( மாலா) ( பொருளாளர்)
திரு.கு.சிவராசா
திரு.ச.மோகனகுமார்
திரு.பா.சுரேஸ்குமார்
திரு.சி.ஜீவதாஸ்
புங்குடுதீவு கமலாம்பிகை பழைய மாணவர் சங்கத்தின் பிரான்ஸ் கிளையின் நிர்வாகக்குழு தெரிவு 15.08.2014 அன்று சோதியா கலைக்கல்லூரியில் நடைபெற்றது. மேற்படி கூட்டத்தில் பின்வரும் ஒழுங்கில் நிர்வாகக்குழு இனிதே தெரிவுசெய்யப்பட்டது.
நிர்வாகக்குழு
தலைவர் - திரு. வைரவநாதன்
உப தலைவர் - திரு. மோகனராஜன்
செயலாளர் - திருமதி.சண்முகநாதன்
உப செயலாளர் - திரு.விஜியதாசன்
பொருளாளர் - திரு.தவராஜா
உப பொருளாளர் - திருமதி ஜீவா ஜெகதீஸ்வரி
மத்தியகுழு
திருமதி.புஷ்பராணி, திரு செல்வராஜா
திரு. திருநாவுக்கரசு திரு.குணபாலன்
ஆலோசனைக்குழு
திரு. திருச்செல்வம், திரு. கோணேஸ்வரன், திரு. கிருஷ்ணபிள்ளை
திரு. ராஜ்குமார்
செயற்குழு
திருமதி. சார்ளா, திரு. நகுலன், திரு. செல்வகுமாரன், திரு. கரன்
இளையோர் அணி
திரு. சுதர்சன், திரு. பாஸ்கரன், திரு. கமலதர்சன், திருமதி. லதா
திருமதி. தயா, திருமதி. நிஷா
பழைய மாணவர் சங்க கனடாக்கிளை
புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலய பழைய மாணவர் சங்கம்-கனடாக் கிளை 10.08.2014 பாபா திருமண மண்டபத்தில் நடைபெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து அங்குரார்பணம் செய்து வைக்கப்பட்டது. பின்வருவோர் நிர்வாகசபை உறுப்பினர்களாக ஏகமனதாக சபையினரால் தெரிவு செய்யப்பட்டனர்.
நிர்வாகசபை உறுப்பினர்கள்
திரு.தி.கருணாகரன் (தலைவர்), திரு.து.ரவீந்திரன் (செயலாளர்), திரு.மா.மோகனபாலன் (பொருளாளர்), திரு.சு.பத்மநாதன் (உப தலைவர்), திரு.க.சண்முகசுந்தரம்(உப செயலாளர்). திரு.த.குகனேந்திரன், திரு.ஆர்.ஆர்.பிரபா, திரு.கு.அனுராகரன், திருமதி.விக்னேஸ்வரி, திரு.ந.தர்மபாலன் (போசகர்)
பழைய மாணவர் சங்க சுவிற்சலாந்துக்கிளை
சுவிற்சலாந்திற்கான புங்குடுதீவு கமலாம்பிகை மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கக்கிளை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. 15.06.2014 ஞாயிறன்று மாலை 6 மணியளவில் சூரிச்சில் புங்குடுதீவு கமலாம்பிகை மகா வித்தியாலய பழைய மாணவர்கள் ஒன்றுகூடி நிகழ்த்தப்பட்ட கூட்டத்தில் சுவிற்சர்லாந்திற்கான பழைய மாணவர் சங்கக்கிளை ஆரம்பித்து வைக்கப்பட்டது .
நிர்வாக சபை
தலைவர் -குமாரசாமி சுரேஷ்
உப தலைவர் - சுப்பிரமணியம் சண்முகநாதன்
இணைச்செயலாளர்கள் -வில்வரத்தினம் பகீரதன், தர்மபாலன் பார்த்திபன்
இணைச்செயலாளர்கள் -வில்வரத்தினம் பகீரதன், தர்மபாலன் பார்த்திபன்
பொருளாளர் -இராசமாணிக்கம் ஸ்ரீஸ்கந்தராசா
உபபொருளாளர் -நவரத்தினம் சிவானந்தன்
நிர்வாக உறுப்பினர்கள்
நாகலிங்கம் திருஞானமூர்த்தி (சூரிச் பொறுப்பளார், சிவசம்பு சந்திரபாலன்(பேர்ண் ,ஊடகப் பொறுப்பாளர் ), நாகராசா ஜெயக்குமார் ,
பரநிருபசிங்கம் ராஜகோபால், கணேசு பேரின்பநாதன்
ஆலோசகர்கள்
ஆலோசகர்கள்
இராசமாணிக்கம் ரவீந்திரன் , சுப்பிரமணியம் புவனேந்திரன் ,துரைராசா சுரேந்திரராசா , அரியபுத்திரன் நிமலன்












































கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக