வெள்ளி, 1 ஜூலை, 2011

பழைய செய்திகளுக்கு கீழே சென்று பழைய இடுகைகள் என்பதை அழுத்துங்கள் 

திங்கள், 30 மே, 2011

கமலாம்பிகை பழைய மாணவர்கள்

சுவிட்சர்லாந்தில் வாழும் கமலாம்பிகை பழைய மாணவர்கள் பட்டியல் 
--------------------------------------------------------------------------------------------------
ஐ .தர்மகுலசிங்கம் 
மகாலிங்கம் 
சுசீலாதேவி 
த.கெங்கன்
நா.சிவராசா 
திருமதி.கலா வரோபதிராசா 
ப.கனகலிங்கம் 
பா.சிவசூரியதாஸ் 
நா.தர்மலிங்கம் 
ந.காராளபிள்ளை 
கி.பாஸ்கரன் 
தர்மலிங்கம் ரவி 
தர்மலிங்கம் சந்திரன் 
செல்வி ஐயாத்துரை (தற்போது திருமதி )
திருமதி  விஜி (தூண் )
குமரன் (ஸ்பீஸ் )
க.நவதாசன்
கு.சட்குனானந்தன் 
ச.சட்குனானந்தன்
கு.விஜயனாந்தன் 
திருமதி ஆனந்தி (செல்வி இராசதுரை)
இ.சதானானந்தன் 
இ.பாலகுகன் 
க.கேதாரகவ்ரீஷ்வரன்

ப.கைலாயநாயகி
பே.குகதாஸ் 
கு.ரஜினி 
அ.பஞ்சலிங்கம் 
ச.குகதாஸ் 
ச.மோகனதாஸ் 
சு.கணபதிபிள்ளை 
நா.அரவிந்தகோஸ்
கி.பிரபாகரன் 
கி.சௌந்திரராசன் 
கி.ஸ்ரீகரன் 
எஸ்.சசிமாலா 
ரா.ரமணி 
இ.இந்திரசீலன் 
ச.சண்முகதாஸ் 
அ.கைலாசநாதன் 
ஆ.கைலாசநாதன் 
கை.இராசகுலேஸ்வரி
சிவ .சந்திரபாலன் 
ப.உலகநாதன் 
ப.இராஜகோபால் 
அ.நிமலன் 
யோ.சாரதாதேவி 
ஜெ.வளர்மதி 
செ.சத்தியமூர்த்தி 
திருமதி.சத்தியமூர்த்தி 
அ.இராசன் 
அ.சுந்தரேஸ்வரன் 
க.மணியழகன் 
அ.திகிலழகன்
நா.திருஞானமூர்த்தி
திருமதி திருஞானமூர்த்தி
திருமதி வசந்தி பிரைபோர்க் 
தி.தவச்செல்வி 
திருமதி.தயாளன் 
சோ.கைலைவாசன் 
கை.மோகனராணி 
சோ.தயாளன் 
த.பத்மினி 
த.உமாதேவி(பவானி) 
வே.யோகராசா 
திருமதி யோகராசா மல்லிகா 
வே.கனகராசா 
க.பாலகுமார் 
திருமதி ஆர்.கோகிலவாணி 
நா.ஜெயராசன்
நா.கோமளாதேவி
சி.நாகரத்தினம் 
த.உதயகுமார் 
த.ஜெயக்குமார் 
மு.சுரேஷ் 
க.கிருஷ்ணவதனி 
த.தனலக்ஸ்மி
செ.தட்பரானந்தன் 
க.திருநாவுக்கரசு
க.பேரின்பநாதன் 
தி.கலாவேணி 
உ.சரோஜா 
தி.சிவதாசன் 
ந.யோகராசா 
செ.சிவலிங்கம் 
ஆ.இந்திராதேவி 
மோ.சுபாசினி 
திருமதி கலாவேணி 
சி.சித்திராதேவி 
ரூ.பிராப்தா 
ச.ரமேஸ் (ராஜமோகன்)
ந.கிருஷ்ணபாலன் 
தி.பத்மகாந்தன் 
இ.ஸ்ரீஸ்கந்தராசா 
திருமதி .ஸ்ரீஸ்கந்தராசா 
இ.ரவீந்திரன் 
வி.பகீரதன் 
வி.பாஸ்கரன் 
கா.பாலசுபிரமணியம்
க.சோமாஸ்கந்தர் 
திருமதி பாலசுபிரமணியம் 
திருமதி விக்னேஸ்வரன் ராதாகெளரி 
க.சுந்தரேஸ்வர சர்மா 
தி.அன்பழகி 
தி.அன்பழகன் 
சு.ஆனந்தி 
இ.சுரேஷ் 
ஐ.சிவஞானம் 
சி.சௌந்திரராசன் 
க.அருந்தவநாதன் 
பா.பாக்கியம் 
செல்லையா 
செ.தர்மவதி 
க.கிருபாகரன் 
திருமதி கிருபாகரன் 
செ.தயன்
செ.ரதன்
இ.மகாலிங்கம் 
திருமதி சு.லதா 
சி.விஸ்வலிங்கம் 
திருமதி.வி லோலா 
செல்வி கிர்ஷ்ணபிள்ளை1(தற்போது திருமதி)
செல்வி கிருஷ்ணபிள்ளை2 (தற்போது திருமதி )
க.கணேசராசா 
ப.கலைச்செல்வி 
த .நித்தியானந்தன் 
த.பிரேமானந்தன்
திருமதி பிரேமானந்தன் 
சு.சண்முகநாதன் 
திருமதி.சண்முகநாதன் 
வி.அரிச்சந்திரன் 
கோணேஸ்வரன் 
த.நாதன் 
து.துரைராசா 
க.யோகராணி 
க.குணசிங்கம் 
திருமதி.குணசிங்கம் 
சு.சந்திரன் 
சு.புவனேந்திரன் 
க.அன்பன் 
கா.நாகரத்தினம் 
நா.லலிதா 
பி.ப்ரியா 
வை.இரத்தினம் 
க.அன்னலிங்கம்
திருமதி மல்லிகாவின் சகோதரி பெல்ப்
திருமதி தயன் தீபா                                                                                                         (தொடரும் )

வெள்ளி, 20 மே, 2011புதன், 18 மே, 2011

சங்கு
உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய காலை வணக்கம்!
ஒலி
இன்று:28-5-2011
11
 தொலைபேசி  0094 21 222 7829 மின்னஞ்சல்- editor@valampurii.com
Registered as News paper in Srilanka
160
புங்.கமலாம்பிகை வித்தியாலய பவள விழா நிகழ்வுகள் நாளை
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-05-04 08:01:46| யாழ்ப்பாணம்]
புங்குடுதீவு கமலாம்பிகை கனிஷ்ட மகாவித்தியாலய பவள விழா நிகழ்வுகள் நாளை காலை 9மணிக்கு பாடசாலை மண்டபத்தில் நடைபெறும்.இரு அமர்வுகளாக நடைபெறும் இந் நிகழ்வில் முதல் அமர்வு வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திருமதி சு.விஜயலட்சுமி தலைமையில் நடைபெறும்.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முய ற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா கலந்து கொள்கிறார்.சிறப்பு விருந்தினர்களாக தீவகம் வலயக் கல்விப் பணிப்பாளர் ஜீ.வி.இராதாகிருஷ்ணன், வித்தியாலய பழைய மாணவர் சங்க சுவிஸ் கிளை உறுப்பினர்கள் வ.ஜெயக்குமார், எஸ்.சண்முகநாதன் ஆகியோரும், கெளரவ விருந்தின ராக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கே.கமலேந்திரன் ஆகி யோரும் கலந்து கொள்கின்றனர்.

நிகழ்வில் தொடர்ந்து கமலமலர் நூல் வெளியீடும்,வாழ்த்துரைகளும், மாணவர் கெளரவிப்பும் இடம்பெறும்.அதிபர் நா.நாகராசா தலைமையில் நடை பெறும் மாலை நிகழ்வில் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் நா.சண்முகலிங்கன் பிரதம விருந்தினராக கலந்து கொள்கிறார்.சிறப்பு விருந்தினராக தீவகம் கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஐ.புவனேந்திரன்,வேலணை கோட்டக் கல்வி அதிகாரி கு.சரவணபவன்,ஈழ மக்கள் ஜன நாயகக் கட்சியின் புங்குடு தீவு பொறுப்பாளர் ஐ.சிவநேசன் ஆகியோரும், கெளரவ விருந் தினர்களாக ஓய்வு பெற்ற அதிபர் ந.இராசதுரை, கிராம அலுவலர் எஸ்.சிவா ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

மாலை நிகழ்வுகளில் மாணவர்களின் கலை நிகழ்வுகளும்,பட்டிமன்றம் மற்றும் இசை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன  (thanks-valampurii.com)


படித்தது என்னவோ ஐந்து தான் -இருந்தாலும் 
பிடித்தது இந்தமாலைகள் தான்-அதற்காக 
கொடுத்ததோ சுவிஸ் மக்கள் காசைத்தான்-நாய்கள் நாம் 
கிடைத்தது ஈபீடீபீ தோழரோடு போடோதான்-வாழ்ந்தோம் 

சனி, 14 மே, 2011


இந்த செய்தி அரச சார்பு செய்தியாகும் .அரச ஊடகத்தின் இந்த செய்தியை அப்படியே பிரதி பண்ணி உள்ளோம்.உண்மைதனதுக்கு நாங்கள் பொறுப்பல்லதீவகத்தின் கல்வி வளர்ச்சிக்கு வித்திட்ட பெருமை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களையே சாரும்! - வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர்.With Photos
05.05.2011 - வியாழக்கிழமை  E P D P News

தீவகத்தின் கல்வி வளர்ச்சிக்கு வித்திட்ட பெருமை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களையே சாருமென வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஷ்               

சனி, 7 மே, 2011

புதன், 16 மார்ச், 2011ங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலயத்தில் சிறப்புடன் நடைபெற்ற இல்ல மெய்வல்லுநர் போட்டி.


புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலய இல்ல மெய்வல்லுநர் போட்டியும் சுவிஸில் வசிக்கும் இ.இராசமாணிக்கம் குடும்பத்தின் அன்பளிப்பில் உருவான பாடசாலை பெயர் வலைவுத் திறப்பு விழாவும் 12.03.2011 சனிக்கிழமை அதிபர் நா.நாகராஜா தலைமையில் நடைபெற்றது.


இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் பிரதம விருந்தினராகவும் சிறப்பு விருந்தினர்களான தீவகக் கல்வி வலய திட்டமிடல் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்றஸ், வேலணைக் கோட்டக் கல்வி அதிகாரி கு.சரவணபவானந்தன் ஆகியோரும்,


கௌரவ விருந்தினர்களாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேலணை அமைப்பாளர் சிவராசா, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் புங்குடுதீவு அமைப்பாளர் எஸ்.சிவநேசன், பாடசாலையின் பழைய மாணவர் சங்கச் செயலாளர் க.சதீபன், பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர் ப.வரதராஜா, பாடசாலையின் ஓய்வு பெற்ற அதிபர் ந.இராஜதுரை, புங்குடுதீவு துரைச்சாமி வித்தியாலய அதிபர் திருமதி ம.கணேசன், ஓய்வு பெற்ற அதிபர் க.தர்மகுலசிங்கம், ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி சோ.சிவலிங்கம் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.


இந் நிகழ்வில் பாடசாலையின் பெயர் வலைவினை பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் திறந்து வைத்ததுடன் வெற்றியீட்டிய மாணவர்களுக்கும் இல்லங்களுக்குமான பரிசில்களையும் வழங்கிக் கௌரவித்தார்.

செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

யாழ் /புங்குடுதீவு கமலாம்பிகை கனிஷ்ட மகா வித்தியாலயம்
ஆக்கம் - சிவ-சந்திரபாலன் 
__________________________________________________________________
புங்குடுதீவில் உள்ள உயர்தர பாடசாலைகள் ஐந்தில் இதுவும் ஒன்றாகும் . வாணர் தாம்போதி ஊடாக புங்குடுதீவினுள் நுழைந்ததும் பிரதான வீதியின் இருமருங்கிலும் கட்டிடக் கலையை பறை சாற்றுவது போல அழகான இரண்டு தோற்ற மிளிரவு எம் மனசை தொட்டு செல்லும் .ஓன்று இடப்பக்கத்தில்  இரண்டு மாடி கட்டிடத்தை முன்னணியை கொண்டு கட்சி தரும் இந்த பாடசாலை .மற்றது வலப்பக்கத்தில் சிறப்பாக கோலோச்சும் சிங்கரவேலன் சந்நிதி . ஆரம்பத்தில் சைவப்படசாலை வேதப்பாடசாலை என இரண்டாக நிர்வகிக்கப் பட்ட இரண்டும் ஒன்றாக சேர்க்கப்பட்டு கமலாம்பிகை மகா வித்தியாலயம் என அழைக்கப்படுகிறது.ஓரு இரண்டு மாடிக்கட்டிடம் உட்பட நன்கு கட்டிடத் தொகுதியை கொண்டது இந்தப் பாடசாலை.இந்தப் பாடசாலையின் வளர்ச்சிக்கு மடத்துவெளி சனசமூக நிலையமும் பெற்றோர் ஆசிரியர் சங்கம் ,பழைய மாணவர் சங்கம் போன்ற அமைப்புகளும் பெறும் பங்காற்றியுள்ளன. அத்தோடு இந்த பாடசாலையில் கடமையாற்றிய அதிபர்கள் ஆசிரியர்களையும் நினைவு கூர்ந்து நன்றி பாராட்ட வேண்டும்,


               1935செப்டம்பர்   16ஆம் திகதி ஐந்து மாணவர்களுடனும் இரண்டு ஆசிரியர்களோடும் யாழ்ப்பாணம் சைவ வித்தியா அபிவிருத்திச் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட  இப்பாடசாலை  தற்போது கிழக்கே மத்தியில் அமைந்துள்ள ஒரே ஓரு கட்டிடத்துடன்  தனது கல்விப் பணியை தொடங்கியது. இதன் அருகே தென் மேற்ற்க்கு பக்கமாக பெரிய ஆல மரத்தின் கிழக்கே ஐரோப்பிய ஆட்சியில் மிஷனரிமார்களினால் யா /புங்குடுதீவு அமெர்க்கன் மிஷன் பாடசாலை இயங்கி வந்தது.1962   ஆம் ஆண்டு ஜூன் வரை  யாழ் சைவ வித்தியா அபிவிருத்திச் சங்கத்தினால் நடத்தப்பட்டு வந்த இப்பாடசாலை அரசினர் பாடசாலை ஆக்கபட்டது .இதனைத் தொடர்ந்து1962 செப்டம்பர் இல் அருகாமையில் இருந்த மிசன் பாடசாலையும்  1318ஆம் இலக்க சட்ட்டத்தின் படி கையகப் படுத்தப் பட்டு ஒன்றாக்கப் பட்டது .அன்று முதல் இந்த பாடசாலையின் பெயர் யாழ் புங்குடுதீவு ஸ்ரீ கமலாம்பிகை வித்தியாலயம் என பெயர் மாற்றம் பெற்றது .முதலில் ஐந்தாம் வகுப்பு வரை இருந்த இப்பாடசாலை 1969 இல் ஆறாம் வகுப்பு வரையும்   ௧௯௭௦இல் ஏழாம் வகுப்பு வரையும் 1973இல் பத்தாம் வகுப்பு வரையும் தரம் உயர்த்தப் பட்டது.இந்த பாடசாலையின் தரம் உயர உயர அதன் பலனாக மடத்துவெளி ஊரதீவு வல்லன் பகுதி மாணவர்களின் கல்வி வளர்ச்சியும் உயர்வு கண்டது எனலாம்.  எண்பதுகளில் 260மாணவர்கள் கல்வி கற்க  12 ஆசிரியர்களும் மூன்று தொண்டர் ஆசிரியர்களும் பணியாற்றியது பெருமை மிக்க விசயமாகும் .
ஆரம்ப காலத்தில் இல்லையப்பா வாத்தியாரும் பின்னர் துரையப்பா வாத்தியாரும் அதிபர்களாக பெறும் பணியாற்றினர். தொடர்ந்து ச.சொக்கலிங்கம் .த.பொன்னையா போன்றோரும் அதிபர்களாக பணி புரிந்தார்கள்.ச.சொக்கலிங்கம் அவர்களின் காலத்தில் அவரது பெரு முயற்சியினால் தற்கு பக்கமாக மத்தியில் உள்ள கட்டிடம் அரச உதவியின்மத்தியில் ஆசிரியர்கள் மற்றும் உயர் வகுப்பு மாணவர்களின் தொண்டு அடிப்படையிலும் கட்டப் பட்டது.  சொக்கலிங்கம் அதிபர் அவர்கள் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு சேவை நேரம் போக வேறு நேரத்திலும் பிரத்தியேகமாக வகுப்புகளை நடாத்தி கிராம மாணவர்களின் கல்விக்கு உதவியமை குறிப்பிடத்தக்கது. அடுத்து அதிபாரக பொறுப்பேற்ற த.பொன்னையா அவர்கள்  அந்த பகுதி இளைஞர்களின் ஒத்துழைப்பை பெற்று பாடசாலையின் வளர்ச்சிக்கு பெரும்பாடு பட்டார்.இவரது காலத்தில் மூன்றாவது விஞ்சான  ஆய்வு கூட கட்டிடம் அமைக்கப்பட்டது . இல்ல விளையாட்டு போட்டிகள் .தமிழ் தின போட்டிகள்  என படசாளி களை   கடடிய காலம் இது .
உயர் வகுப்பு மாணவர்களின் தமிழ் கல்விக்கு ஆசானாக விளங்கிய இவருக்கு உதவியாக பிரபல சமூக சேவகரான யோ.பூராசா அவர்கள் உப அதிபராக இருந்து பின்னர் அதிபராக பதவி ஏற்றார் .யோ.பூராசா அவர்கள் அந்த பகுதி பெற்றோர்  பழைய மாணவர்கள் இளைஞர்கள் என அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து மடத்துவெளி சன சமூக நிலையத்தின் சேவை நலனையும் பயன் படுத்தி கல்வி விளையாட்டு  மொழிவளர்ச்சி  சிரமதானம் பொதுப்பணி என பாடசாலையை சிறப்பாக வாழி நடத்தி பெருமை சேர்த்தார் .இவரை பின் தொடர்ந்து சண்முகநாதன் மு மகேந்திரன் ஆகியோர் அதிபராகினர்.1991இல் மக்கள் இடம்பெயர அதிபராக இருந்த மு.மகேந்திரன் யாழ்ப்பாணத்தில் ஆனைப்பந்தி உயர்களைக் கல்லூரி என்ற தனியார் கல்வி நிலையத்தில் இந்த பாடசாலை மாணவர்களோடு சித்திவிநாயர் திருநாவுக்கரசு குறிகட்டுவான் அ மி த பாடசாலை மாணவர்களையும் ஒன்று சேர்த்து தற்காலிகமாக இயக்கினர் .  மீண்டும் 1996இல் அப்பாடசாலை உப அதிபராக இருந்த ஊரதீவின் பொதுச்சேவை முதன்மையாளரான ந.இராசதுரை அவர்கள் இப்பாடசாலையை மறுசீரமைத்து தொடக்கி வைத்தார் .பின்வந்த காலங்களில் இவரே அதிபராக பதவி ஏற்றார் .இவரது ஓய்வுக்கு பின்னர் மற்றுமொரு மண்ணின் மைந்தரான ந.நாகராசா அதிபராகி இப்போது வரை பணி புரிகிறார்.இந்த பாடசாலையில் இந்த பகுதி ஆசிரியர்களான க.ஐயாத்துரை க தியாகராச போன்றோர் ஆசிரியப் பணியோடு இந்த பாடசாலைகென அமைச்சக தொடர்புகள் நிர்வாக பணிகள் மற்றும் போதுசெவியாகள் என நிறைய பணிகளை ஆற்றியதை  மறக்கக முடியாது அண்மைய காலத்தில் பொதுநல சேவையாளரான வி.இராமநாதன் இந்த பாடசாலையின் கிழக்கே அமைந்துள்ள வயல் காணியினை பாடசாலைக்கென வழங்கி உள்ளார்.
இந்த பாடசாலையில் ஆரம்ப கல்வியை கற்ற மாணவர்களில் மிகவும் கடுமையான ஏழாம் தர புலமைப் பாரிஸில் பரீட்சையில் ந.சொக்கலிங்கம் ,சிவ.சந்திரபாலன் போன்றோர் சித்தியெய்தி வழிகாட்டினர். தொடர்ந்து ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சையிலும் ஏராமான மாணவர்கள் சித்தி பெற்று பாடசாலையின் வளர்ச்சியில் உதாரணமாகினர். இந்த பாடசாலையின் மாணவர்கள் ஏராளமானவர்கள் யாழ் உயர்தர பாடசாலைகளில்போட்டி பரீட்சைகளில் தேறி  உயர்கல்வியை பெற சென்றமை குறிப்பிடத்தக்கது.விடுதி மாணவர்களாகவும் தாங்கி கல்வி கற்று வந்தனர். அத்தோடு புங்குடுதீவு மகா வித்தியாலயம் வேலணை மத்திய கல்லூரிகளையும் இவர்களே அலங்கரித்தனர் .இந்த பாடசாலைகளின் மாணவ தலைவர்கள் மாணவர் மன்றங்கள் என பொறுப்பான பல பதவிகளை வகித்து ஊருக்கு சிறப்பு சேர்த்தனர்  .இந்த பாடசாலையின் கல்வி கற்றவர்கள் மாருதுவர்கள் சட்டத்தரணிகள் நிர்வாக சேவையினர் ஊடகத்துறையினர் கலைத்துறையினர்  என தாயகத்திலும் உலகம் பூராவும் வலம வருவது பாராட்டத்தக்கது .


வியாழன், 20 ஜனவரி, 2011

www.pungudutivu1@gmail.com

இந்த பாடசாலை பற்றிய தகவல்கள் நிழல்படங்கள் கற்பித்த ஆசிரியர்கள் அதிபர்கள் பழைய மாணவர்கள் பாடசாலையின் சாதனைகள் தற்போது கற்கின்ற மாணவர்கள் ஆசிரியர்களின் ஆக்கங்கள்  வரவேற்கப் படுகின்றன மேலே உள்ள மின்னஞ்சலுக்கு அனுப்பி உதவவும் 
எங்கள் ஆலயம்  இது போற்றுவோமாக 
இது யாழ் /புங்குடுதீவு கமலாம்பிகை மகா வித்தியாலயத்தின் இணையதளம் தற்போது இது தயாரிப்பு நிலையி ல் உள்ளது