புதன், 16 மார்ச், 2011ங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலயத்தில் சிறப்புடன் நடைபெற்ற இல்ல மெய்வல்லுநர் போட்டி.


புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலய இல்ல மெய்வல்லுநர் போட்டியும் சுவிஸில் வசிக்கும் இ.இராசமாணிக்கம் குடும்பத்தின் அன்பளிப்பில் உருவான பாடசாலை பெயர் வலைவுத் திறப்பு விழாவும் 12.03.2011 சனிக்கிழமை அதிபர் நா.நாகராஜா தலைமையில் நடைபெற்றது.


இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் பிரதம விருந்தினராகவும் சிறப்பு விருந்தினர்களான தீவகக் கல்வி வலய திட்டமிடல் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்றஸ், வேலணைக் கோட்டக் கல்வி அதிகாரி கு.சரவணபவானந்தன் ஆகியோரும்,


கௌரவ விருந்தினர்களாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேலணை அமைப்பாளர் சிவராசா, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் புங்குடுதீவு அமைப்பாளர் எஸ்.சிவநேசன், பாடசாலையின் பழைய மாணவர் சங்கச் செயலாளர் க.சதீபன், பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர் ப.வரதராஜா, பாடசாலையின் ஓய்வு பெற்ற அதிபர் ந.இராஜதுரை, புங்குடுதீவு துரைச்சாமி வித்தியாலய அதிபர் திருமதி ம.கணேசன், ஓய்வு பெற்ற அதிபர் க.தர்மகுலசிங்கம், ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி சோ.சிவலிங்கம் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.


இந் நிகழ்வில் பாடசாலையின் பெயர் வலைவினை பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் திறந்து வைத்ததுடன் வெற்றியீட்டிய மாணவர்களுக்கும் இல்லங்களுக்குமான பரிசில்களையும் வழங்கிக் கௌரவித்தார்.