ஞாயிறு, 14 ஜூலை, 2013

ச.சொக்கலிங்கம்


ச.சொக்கலிங்கம் அதிபர் (சிவ -சந்திரபாலன் )
----------------------------------

புங்குடுதீவு வடக்கு பகுதியின் 7ஆம் ,8 ஆம் 9 ஆம் வட்டார மக்களின் அறிவுக்கண்ணை திறந்த அற்புதமான ஒரு ஆசான் உயர்திரு ச.சொக்கலிங்கம் அவர்கள் என்றால் மிகையாகாது .மடத்துவெளி  பாலசுப்பிரமணியரின் திருவாசல் முன்னே குடியிருந்த இந்த ஆசிரியர் பெருங்காடு சுப்பிரமணிய வித்தியாலயத்திலும் இறுதி காலங்களில் மடத்துவெளி கமலாம்பிகை மகா வித்தியாலயத்திலும் ஆசிரியராகவும் அதிபராகவும் பணி புரிந்து கிராமத்தின் கல்வி வளர்ச்சிக்கு அரும்பாடு பட்டவர் .1912 இல் புங்குடுதீவில் பிறந்து அன்றைய காலத்தில் ஆங்கிலேயரால்  நேரடியாக செயல்படுத்தப்பட்ட ஆங்கிலத்தோடு ஒட்டிய தமிழ் மூலக் கல்வியில் உயர்தரம் வரை கற்று தேறினார் பழைய முறையிலான எஸ் எஸ் சி பரீட்சையை அப்போதைய திட்டப்படி ஆங்கிலம் தமிழ் கலந்த இருமொழி தெரிவில் எழுதி சித்தி எய்தியவர் .தமிழ் கட்டுரைகளை ஆங்கிலத்துக்கும் ஆங்கிலக் கட்டுரைகளை தமிழுக்கும் மொழிபெயர்க்கும் விதிமுறைகள் கொண்டதான அந்த கல்வி முறையில் தேர்ச்சி பெற்றவர் .கணிதம் தமிழ் சமயம் ஆங்கிலம் என்பவற்றை முறைப்படி கற்பிக்கும் ஆற்றலும் கொண்டவர்.கிராம மாணவர்களின் நலன் கருதி பாடசாலை நேரங்கள் தவிர மாலை நேரத்திலும் மேலதிகமாக  வகுப்புக்களை நடத்தி விசேசமான  பரீட்சைகளில் தேர்வு பெற காரணமாக இருந்தவர் . புலமைப் பரிசல் பரீட்சைக்கு மாணவர்களை ஆயத்தப் படுத்துவதில் வல்லவாராக திகழ்ந்தார் இதற்கெனவும் மாலை நேர வகுப்புகளை திறம்பட  நடத்தினார் .இவரது விடாமுயற்சிக்கு பலனாக இவரது மாணவனான சிவ-சந்திரபாலன் 7 ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்தமை குறிப்பிடத்தக்கது .இவர் அதிபராக இருந்த காலத்தில் தான் கமலாம்பிகை வித்தியாலயத்தின் மத்தியில் உள்ள கட்டிடம்  தெற்கே உள்ள கட்டிடம்  .விஞ்ஞான ஆய்வுகூடம் என்பன முற்று முழுதாக  அமைக்கப் பட்டு மகா வித்தியாலயம் என்ற  தரத்துக்கு இப்பாடசாலை தரமுயர்த்த கூடியதாக இருந்தது .பாடசாலை கிணற்றினையும் மலசலகூடத்தினையும் புதிதாக அமைத்தார் . பாடசாலை  சுற்றி வரவுள்ள பாதுகாப்பு வேலிகளை முழுவதுமாக அடைத்து வந்தார் .பாடசாலையின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் பழைய மாணவர் சங்கம் மடத்துவெளி சன சமூக நிலையம் என்பவற்றோடு கூடி திட்டங்களை வகுத்து பல  அரிய பணிகளை செவ்வனே  நிறைவேற்றி வந்தார்  பாடசாலை விளையாட்டு போட்டியினை வருடாவருடம்  நடத்த ஆரம்பித்து வைத்து வித்திடவரும் இவரே .பாடசாலைக்கு வழங்கபட்ட காலை ஆகாரமான பால் விநியோகத்தையும் தனது இல்லத்திலேயே  நடத்த ஒத்துழைத்து இடம் வழங்கி வந்தார் 1971 இல் கமலாம்பிகையில் அதிபர் பதவியில் இருந்து ஒய்வு பெற்றார் .
இவர் சமூக சேவையிலும் நிறைந்த ஈடுபாடு கொண்டிருந்தார் .சமூகத்துக்கே ஒரு வழிகாடியாக வாழ்ந்து வந்தார் .புங்குடுதீவில் புகழ் பெற்று விளங்கு முயர் தரத்திலான மடத்துவெளி சனசமூக நிலையத்தினை திரு ஐயாத்துரை ஆசிரியரோடு இணைந்து 1959 இல்  ஸ்தாபித்து வைத்த பெருமைக்குரியவர்  ஆரம்பத்தில் கமலாம்பிகை வளவிலும் பின்னர் இந்த பாடசாலை கட்டிடத்திலும் அமைத்து சேவையாற்றியவர் .
ஒய்வு பெற்ற போது ஓய்ந்திடாது கிராமத்து பஞ்சாயத்து தலைவராக இருந்து  ஏராளமான பிணக்குகளை இலகுவாக நீதியாக தீர்த்து வைத்து மக்களின் அபிமானத்தை பெற்றார்
தனியே கல்வி அறிவு மட்டும் அன்றி சாஸ்திர கலை காணி  அளவிடும் அறிவு என்பவற்றையும் கற்று மக்களுக்கு சேவை புரிந்து வந்தார் .தனது 83 ஆவது  வயதில் இவர் பூதவுடலை நீத்தார் .இவரது சேவையும் புகழும் என்றும் எம்மக்கள் மனதில் நின்று நிலைக்கும் 

சனி, 20 ஏப்ரல், 2013


சுவிஸ் வாழ் புங்குடுதீவு மக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் 
புங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்பிரமணியர் ஆலயம் பாலஸ்தானம் செய்யப் பட்டு முற்றுமுழுதாக நிர்மாணிக்கப்பட்டு வருவது யாவரும் அறிந்த தே .அத்தோடு புதிய ராஜகோபுரமும் அமைக்கப்பட்டும் வருகின்றது .இந்த ஆலயத்தின் திருபணிக்கென சுவிசில் ஏராளமான  தமிழ் நெஞ்சங்கள் நிதிப் பங்களிப்பை செய்து வருகின்றார்கள்.பெரிய நகரங்களில் உங்களை நாம்  அணுகி இந்த நிதிப் பங்களிப்பை பெற்றுக் கொண்டாலும் ஏனைய நகரங்களில் உங்கள் இல்லங்களுக்கு வர முடியாத கஷ்டமான சூழலில் நாம் இருக்கிறோம் .எமது இயந்திரமயமான  வாழ்க்கை முறையில் இது சாத்தியபப்படாத விசயமும் கூட.ஆதலால் இந்த திருப்பணிக்கு உதவ  நீங்களாகவே  வந்து தொடர்பு கொண்டு பங்களிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம் ,மேற்படி திருப்பணி வேலைகள்  யாவும் அண்மையில் கனடாவில் இருந்து தாயகம் திரும்பி நகேயே வாழும் அ .சண்முகநாதன் அவர்களின் நேரடி மேற்பார்வையில் நடைபெறுகின்றன.

தொடர்புகளுக்கு

அருணாசலம் கைலாசநாதன் (குழந்தை ) 0319513381

www .madathuveli .net
www .pungudutivuswiss .com

திங்கள், 18 மார்ச், 2013

இப்படை  தோற்கின் எப்படை  வெல்லும்இன்று மிகவும் சிறப்பாக நடைபெற்ற வருட்சந்த விளையாட்டு போட்டிகளின் சில படங்கள் .மேற்படி விழாவில் கனடாவில் இருந்து தாயகம் திரும்பி சமூக சேவை செய்து வரும் மடத்துவெளியின் சிற்பி திரு.அ .சண்முகநாதனும் கலந்து கொண்டு சிறப்பித்தார்

திங்கள், 25 பிப்ரவரி, 2013

s.j poorasa


புங்குடுதீவு கிராமத்தில் பிறந்து சிறந்த மாணாக்கனாகத் திகழ்ந்து 1959ல் ஆசிரியரானார்.
கிராம வளர்ச்சிக்காக குறிகட்டுவான் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையை உருவாக்குவதில் வெற்றி கண்டார்.
அத்துடன் கல்வி வளர்ச்சிக்கழகம் என்ற அமைப்பினையும் ஏற்படுத்தியுள்ளார்.
1974ல் புங்குடுதீவு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தினை மேன்மையடையச் செய்யும் பொருட்டு தலைமைப் பொறுப்பினை ஏற்று எரிபொருள் நிரப்பு நிலையம். மக்கள் கடைகள், மக்கள் வங்கிக் கிளை என்பவற்றை நிறுவி உள்ளார்;.
இவை தவிர பாடசாலைகளை மீளத் திறத்தல் முன்பள்ளிகளின் வளர்ச்சியை முன்னெடுத்தல், வேலையற்றிருப்போருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்கான நடவடிக்கை எடுத்துள்ளார்.
பிறப்பால் கத்தோலிக்கத்தினை சார்ந்திருந்தபோதிலும் சகல சமயங்களையும் மதித்து தன்னால் அச் சமயத்தவர்களுக்கு செய்யக்கூடிய உதவிகளைச் செய்துள்ளார்.

புதன், 20 பிப்ரவரி, 2013

மடத்துவெளி என்பது புங்குடுதீவின் ஒரு அழகிய கிராமம் ஆகும் . யாழ்ப்பாண நகரத்தில் இருந்து பண்ணை வீதி பண்ணை பலம் ஊடக அல்லைபிட்டி அராலி வேலணை வேலணைத்துறை போன்ற இடங்களை

செவ்வாய், 19 பிப்ரவரி, 2013


photos