வியாழன், 12 ஜூன், 2014

வணக்கம்.
நண்பர் சிவம் கூறிய கருத்துகளுக்கு எனது பதிலை முதலில் தருகிறேன் .நான் ஈழத்தில் இருந்த போதே ஊடகத் துறையில் புகுந்து தொடர்ந்து சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்ந்து சுமார் 30 வ
ருடங்களாகியும் அதே துறையில் ஈடுபட்டு வருகிறேன். ஐரோப்பாவில் தமிழன்,ஈழநாடு,ஈழமுரசு போன்ற பத்திரிகைகளிலும் ஐ பீ சீ தமிழ்,ரீ ஆர் ரீ தமிழ் ஒலி ,தமிழ் அலை ஆகிய வானொலிகளிலும் ரீ ஆர் ரீ ரீ ரீ என் போன்ற தொலைக்காட்சிகளிலும் பல்வேறு பொறுப்புக்கள் மற்றும் துறைகள் சார பனி புரிந்துளேன்.அந்த சமயங்களில் எனது பிறந்த ஊரான புங்குட்தீவுக்கு அது சம்பந்தப்பட்ட விடயங்களுக்கும் முன்னுரிமை கொடுத்து நிறைய ஆக்கங்களை எழுதியோ வெளியிட்டோ  ஒளி/ஒலி பரப்பியோ வந்துள்ளேன் .இவை இலமே எனது சொந்த ஆக்கங்கள்.தவிர சுவிசில் எமது ஊருக்கான மைப்பக புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் என்னும் அமைப்பினையும் உருவாக்கி நடத்தி வருகின்றோம்.  இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் முன்னணி வகிக்கும் மின்னியல் கணணி வலை நுட்ப வேகத்துக்கு ஈடுகொட்டுக்குமுகமாக இணைய துறையில் என்னை ஈடுபடுத்தி அங்கும் கூடுதலாக எனது ஊருக்கான பெருமை சேர்க்கும் தளங்களையே தயாரித்து வருகின்றேன் ,அத்தோடு ஏராளமான நிழல்படங்களை கூட தேடி உள்வாங்கி சேமிப்பாக்கி வெளியிட்டுள்ளேன். freewebs .blogspot போன்ற இலவச தளங்கள் உட்பட சுமார் 120 தளங்களை புங்குடுதீவு மண்ணுக்காக நடத்தி  வருகிறேன்.இவை எல்லாமே புங்குட்தீவின் கிராமங்கள் பாடசாலைகள் கொவிலகுள் சமூக சேவை அமைப்புக்கள்.பெரியோர்கள், என  பல்வேறு வகையல் உள்ளடங்குகின்றன .இந்த தளங்களில் என்னால் எழுதபட்டுள்ள கட்டுரைகளே முற்றிலுமாக இடம் பிடித்துள்ளன..விகிபெடியவுக்கும் நன் எழுதுகின்ற கட்டுரைகளை blogspot  தமிழ் எழுதிய பின்னரே பிரதி பண்ணி இணைக்கின்றேன் .அ ந்த முறையில் நான் தமிழ் எழுத இலகுவாக பயின்று விட்டதனால் இந்த வழியை கையாள்கிறேன் இப்போத்ழு உங்களுக்கு புரிந்திருக்கும் அந்த இணையங்கள் எல்லாவற்றிலுமே  என்னால் எழுதபட்டுள்ள கட்டுரைகளே இடம்பெற்றுள்ளன. எமது ஊ ருக்கான 6அமைப்புக்கள வெளிநாடுகளில் இயங்குகின்றன.அவை எல்லாமே சகோதர இயக்க ங்களாக செயபடுவதனால் அவை கூட எனது ஆக்கங்களை பயன்படுத்துகின்றன. அண்மையில் கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் வெளியிட்ட புங்குடுதீவு மான்மியம் என்ற 700 பக்கங்கள் கொண்ட ஆவண   நூலின் ஆசிரியர் குழுவிலும் நான் இடம்பெற்று பணி ஆற்றினேன்.ஆகவே புங்குடுதீவு சம்பந்தமான  பல இணையங்களில் எனது ஆக்ககன்ல இடம்பிடித்துள்ளன.அதற்கான காரணங்களை மேலே விரிவாக்கி உள்ளேன்.இருந்தும் www .pungudutivu .info ,www .pungudutivu .org .www punguduthivuuk போன்றஓரிரு  இணையங்கள் எனது அக்ககஅகழி பிரதி பண்ணி வெளியிட்டுள்ளன.அவை சில கட்டுரைகளில் எனது பெயரை வெளியிடவில்லை.இந்த உரிமை மீறலை செய்துள்ளமையால் உங்களுக்கு அது வேறு யாரோ எழுதியதாக  படலாம்.அவை எனது நண்பர்கள் அல்லது சகோதர அமைப்புக்களின் உடையவை என்பதால் நான் பெரிது படுத்தவில்லை. நீங்கள் கேட்டபடி வட்டாரங்கள் பற்றி எழுத சொல்லி  கேட்டமைக்கு பதில்.நீங்கள் கேடிருப்பது உங்களால் முடியுமா எழுதி நிரூபியுங்கள் என்பது போல படுகிறது.அப்போ இந்த கட் டுரைகள் நன் எழுத்து போல தொக்கு நிற்கிறது.ஐயா வட்டாரங்கள் ஒவ்வொரு கிராமங்களையே உள்ளடக்கி நிற்கின்றன.அந்த வகையி ல் கூட நா ன் மடத்துவெளி ஊரதீ வு பெருங்காடு என்று தனித்தனியே எழுதி  உள்ளேன் .மேலும் உங்கள் வசனங்களின் பொருள் கூட சற்று புரிய வண்ணம் அதாவது பொருள் வெளிப்பாடு சிறப் பில்லாமல் தெரிகிறது என்னால் புரிந்து கொள்ள முடியவில்லைநான் பல்வேறுதுறைகளில் ஈடுபடுவதனால் நேரம் போதவில்லை.காலக்கிரமத்தில் எழுதிக் குவிப்பேன் அப்போது புரியும்.உங்களுக்கு . நக்கீரனுக்கு நன்றிகள்  சிவ-சந்திரபாலன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக