புதன், 20 பிப்ரவரி, 2013

மடத்துவெளி என்பது புங்குடுதீவின் ஒரு அழகிய கிராமம் ஆகும் . யாழ்ப்பாண நகரத்தில் இருந்து பண்ணை வீதி பண்ணை பலம் ஊடக அல்லைபிட்டி அராலி வேலணை வேலணைத்துறை போன்ற இடங்களை
கடந்ததும் இலங்கையின் இலங்கையின் வரலாற்று பெருமை மிக்க புங்குடுதீவு வேலணை வாணர் தம்போதி ஊடாக புங்குடுதீவை அடையலாம்.இந்த ஊரை அடைந்ததும் முதலில் உங்கள் கண்களை கா  ட்சிபடுதும் அழகிய கிராமமே மடத்துவெளி.  புங்குடுதீவு நுழைவாயிலில் மடத்துத்துறை  என்ற இடத்தில் இருந்து தான் இந்த பாலம் கட்டும் முன்னர் மக்கள் தோணிகள் மூலம் வேலணை ஊடாக  யாழ் நகருக்கு செல்வர் . இந்த தேவை கருதி இந்த துறையில் பயணிகள் கொண்டு வரும் பொதிகளை இறக்கி வைக்க ஒரு சுமைதாங்கியும் அவர்கள் தங்கி இளைப்பாற ஒரு மடமும் இருந்ததாக  வரலாறு உண்டு .இந்த பகுதியில் ஆரம்பத்தில் ஊரதீவை அண் மித்ததாக பிரதான வீதிக்கு மேற்காக   ,பெருமை மிக்க நல்ல விளைச்சல் நிலங்களாக நெல்வயல்கள் பரந்து விரிந்து கிடந்தன .இங்கிருந்து குறிச்சிக் காடு வரை இவை விசாலித் திருந்தன . இங்கே காணப்பட்ட மடத்தையொட்டி தொடராக வயல் வெளிகளே காணப்பட்டமையால் மடத்துவெளி என பெயர் உண்டாயிற்று . ஆனாலும் பிற்காலத்தில் குடிப்பரம்பல் அதிகரிக்க இந்த கிராமம் வீடுகளால் ஆக் கிரமிக்கப்பட்டு விட்டன .
வட்டார ரீதியாக வகுக்கப்டும் பொது பிரதான வீதிக்கு மேற்காக ஏழாம் வட்டாரமாகவும் கிழக்காக எட்டாம் வட்டரமாகவும் இருந்தாலும் பிரதான வீதியை அண்மித்த மேதகு பகுதியும் மடத்துவெளி கிராமமாகவே  உள்ளது . நுழைவாயில் உள்ள மடத்து துறை முதல தெற்கே குறிச்சிக் காடு வரையும் கிழக்கே கடற்கரை வரையும் மேற்கே பள்ளகாடு கரைச்சி வாண்டையாவெளி வரதீவு களதீவு வரையும் தெற்கே குறிச்சிக்காடு சந்தியில்  இருந்து வல்லன் நோக்கி செல்லும் வீதியை எல்லையாக கொண்டது  வரை விரிந்து கிடக்கின்றது 
மடத்துவெளி என்றதும் புங்குடுதீவு மக்களுக்கு நினைவுக்கு வருவது அழகிய பச்சை பசேலென்ற நெல்வயல்களும் கம்பீரமாக கட்சி தரும் கமலாம்பிகை மகா வித்தியாலயமும் அழகிய மூன்று கோயில்களும் நல்ல மீன்பிடி வளமுள்ள நீண்ட வெண்மணல் கொண்ட கடற்கரையுமேயாகும் . 
ஆலயங்கள் 
இங்கே புங்குடு தீவின் நுழைவாயிலை அண்மித்து வீரகத்தி விநாயகர் கோவிலும் சற்றே  அப்பால் புங்குடுதீவின் புகழ்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயம் தெற்கே கிழக்கு பகுதியில் நாகதம்பிரான் கோவிலும் காணப்படுகின்றன . இந்த வீரகத்தி விநாயகர் ஆலயம் சிறிதாக இருந்தாளும்கிராம மதகுருவான சின்னதுரை ஐயர் எனபப்டும் கனேசராசகுருக்களின் நேரடி பார்வையின் கீழ் சிறப்பாக வழிபாடு வரப்பட்டது .இங்கு வருடத்துக்கொரு முறை தைப்பொங்கல்  அன்று ஒரு நாள் திருவிழா நடைபெற்று வந்தது .இதனை விட பத்து நாள் திருவெம்பாவை வெகு சிறப்பாக  நடைபெறும் .திருப்பெருந்துறை நாகதம்பிரான் கோவிலிலும் அலங்காரத் திருவிழா பத்து நாட்களும் நடைபெற்றதோடு திருவெ ம்பாவை போன்ற எல்லா வழிபாடுகளும் முறையே நடைபெற்று வந்தன 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக