சனி, 14 மே, 2011


இந்த செய்தி அரச சார்பு செய்தியாகும் .அரச ஊடகத்தின் இந்த செய்தியை அப்படியே பிரதி பண்ணி உள்ளோம்.உண்மைதனதுக்கு நாங்கள் பொறுப்பல்லதீவகத்தின் கல்வி வளர்ச்சிக்கு வித்திட்ட பெருமை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களையே சாரும்! - வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர்.With Photos
05.05.2011 - வியாழக்கிழமை  E P D P News

தீவகத்தின் கல்வி வளர்ச்சிக்கு வித்திட்ட பெருமை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களையே சாருமென வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஷ்
தெரிவித்தார்.

இன்றைய தினம் (5) யாழ். புங்குடுதீவு கமலாம்பிகை கனிஷ்ட மகா வித்தியாலயத்தின் பவள விழாவிற்கு தலைமை வகித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் தீவக மக்களின் வாழ்வோடு ஒன்றிணைந்தவராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விளங்கி வருவதுடன் தீவகத்தின் கல்வி வளர்ச்சிக்கு பல்வேறு வழிகளிலும் வித்திட்ட பெருமையும் அவரையே சாரும்.

இப்பாடசாலை பல கல்விமான்களை மட்டுமல்ல பல்துiறார்ந்த ஆற்றலுள்ளோரையும் வளர்த்தெடுத்துள்ளதுடன் இனிவரும் காலங்களிலும் இதனது கல்விச் சேவை சிறப்பான முறையில் தொடர வேண்டும்.

சிறந்த கல்விச் சமூகத்தின் மூலமே ஒரு சமுதாயம் நல்நிலை அடையும் என்பதுடன் அதற்கிணங்க ஆசிரியர்களும் மாணவர்களும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.

முன்பதாக பவள விழாவின் பிரதம விருந்தினர் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் புங்குடுதீவு மடத்துவேளி ஆலயத்தில் வழிபாடுகளில் கலந்து கொண்டார்.

தொடர்ந்து பாடசாலையை சென்றடைந்த அமைச்சர் அவர்கள் பவள விழா நினைவுக் கல்லினை திரைநீக்கம் செய்து வைத்தார்.

வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அதிபர் நாகராசா உரையாற்றியதைத் தொடர்ந்து பாடசாலைச் சமூகத்தால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பொன்னாடை போர்த்தியும் வாழ்த்துப் பாமாலை வழங்கப்பட்டும் கௌரவிக்கப்பட்டார்.

அங்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சிறப்புரையாற்றுகையில் பாடசாலைச் சமூகம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக பாடசாலைக்கு மின்னிணைப்பு வேலைகள் செய்து தரப்படுமெனவும் வடக்கின் வசந்தம் ஊடாக மின்சாரம் பெற்றுத் தரப்படுமெனவும் மேல்மாடி கட்டிடத்திற்கான ஜன்னல்கள் அமைத்துத் தரப்படுமெனவும் உறுதிமொழி வழங்கினார்.

அத்துடன் மாணவர்கள் அடுத்த பாடசாலை விடுமுறையின் போது கல்விச் சுற்றுலா மேற்கொள்வதற்கான ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும் தெரிவித்தார்.

நிகழ்வில் சுவிஸ் பழைய மாணவர்களினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட 12 துவிச்சக்கர வண்டிகள் வறுமைக் கோட்டிற்குட்பட்ட மாணவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.

இவற்றை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உள்ளிட்டோர் வழங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் கல்வித்துறை சார்ந்த பலரும் கலந்து கொண்டனர்.(thanks-epdpnews.com)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக