புதன், 18 மே, 2011

சங்கு
உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய காலை வணக்கம்!
ஒலி
இன்று:28-5-2011
11
 தொலைபேசி  0094 21 222 7829 மின்னஞ்சல்- editor@valampurii.com
Registered as News paper in Srilanka
160
புங்.கமலாம்பிகை வித்தியாலய பவள விழா நிகழ்வுகள் நாளை
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-05-04 08:01:46| யாழ்ப்பாணம்]
புங்குடுதீவு கமலாம்பிகை கனிஷ்ட மகாவித்தியாலய பவள விழா நிகழ்வுகள் நாளை காலை 9மணிக்கு பாடசாலை மண்டபத்தில் நடைபெறும்.இரு அமர்வுகளாக நடைபெறும் இந் நிகழ்வில் முதல் அமர்வு வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திருமதி சு.விஜயலட்சுமி தலைமையில் நடைபெறும்.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முய ற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா கலந்து கொள்கிறார்.சிறப்பு விருந்தினர்களாக தீவகம் வலயக் கல்விப் பணிப்பாளர் ஜீ.வி.இராதாகிருஷ்ணன், வித்தியாலய பழைய மாணவர் சங்க சுவிஸ் கிளை உறுப்பினர்கள் வ.ஜெயக்குமார், எஸ்.சண்முகநாதன் ஆகியோரும், கெளரவ விருந்தின ராக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கே.கமலேந்திரன் ஆகி யோரும் கலந்து கொள்கின்றனர்.

நிகழ்வில் தொடர்ந்து கமலமலர் நூல் வெளியீடும்,வாழ்த்துரைகளும், மாணவர் கெளரவிப்பும் இடம்பெறும்.அதிபர் நா.நாகராசா தலைமையில் நடை பெறும் மாலை நிகழ்வில் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் நா.சண்முகலிங்கன் பிரதம விருந்தினராக கலந்து கொள்கிறார்.சிறப்பு விருந்தினராக தீவகம் கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஐ.புவனேந்திரன்,வேலணை கோட்டக் கல்வி அதிகாரி கு.சரவணபவன்,ஈழ மக்கள் ஜன நாயகக் கட்சியின் புங்குடு தீவு பொறுப்பாளர் ஐ.சிவநேசன் ஆகியோரும், கெளரவ விருந் தினர்களாக ஓய்வு பெற்ற அதிபர் ந.இராசதுரை, கிராம அலுவலர் எஸ்.சிவா ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

மாலை நிகழ்வுகளில் மாணவர்களின் கலை நிகழ்வுகளும்,பட்டிமன்றம் மற்றும் இசை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன  (thanks-valampurii.com)


படித்தது என்னவோ ஐந்து தான் -இருந்தாலும் 
பிடித்தது இந்தமாலைகள் தான்-அதற்காக 
கொடுத்ததோ சுவிஸ் மக்கள் காசைத்தான்-நாய்கள் நாம் 
கிடைத்தது ஈபீடீபீ தோழரோடு போடோதான்-வாழ்ந்தோம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக